தளபதி விஜய் -மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிற படத்தின் பூஜை இன்று நடந்தது
விஜய்யின் நெருங்கிய உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிற இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
இந்த கதையில் நடிப்பதற்கு மக்கள் செல்வனுக்கு கனமான தொகையைக் கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். மற்றும் இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.