
“ஏன் நான் அப்படி நடிச்சா உன் கண்ண குத்துதா ,வேணும்னா நான் நடிக்கிறத நிப்பாட்டிடவா ? என்னா பேச்சு பேசுறீங்க?”
மல்லுக்கட்டி நிற்கிறார் டாப்சி.!
எதற்காக இந்த சண்டை?
60 வயதைக் கடந்த இரு மூதாட்டிகள் துப்பாக்கி சுடுவதில் பரிசுகளை அள்ளிக் குவித்தவர்கள்.சந்திரா,பிரகாசி தோமர் என்பது அவர்களின் பெயர். குறி தவறாமல் சுடுகிற ஷார்ப் ஷூட்டர்ஸ். அவர்களது வாழ்கையை மையமாக வைத்து சாந்த் ஹி ஆங் என ஒரு படம் தயாராகி இருக்கிறது.
இந்த படத்தில் நடித்ததற்காகத்தான் டாப்சியை கண்டித்து கணைகள்.
இதற்கு அவர் தக்க பதில் கொடுத்திருக்கிறார்.
“என்னுடைய திரைப்பட வாழ்க்கையில் இந்தப் படம் முக்கியமானதாகும். கதையை கேட்கிற போதே என் அம்மாவின் நினைவு வந்து விட்டது. இரண்டு மணி நேரம் நான் அழுதேன் என்பதை உங்களால் நம்ப முடியுமா? அழுதேன். அப்படிப்பட்ட படத்தை நான் மிஸ் பண்ண விரும்பவில்லை.
நான் இப்படி நடிப்பது உங்களுக்கு பிடிக்காவிட்டால் சொல்லுங்கள் நான் நடிப்பதை விட்டு விட்டு குமரிப் பெண்ணாகவே நடித்துவிடுகிறேன்.ஆனால் ஆத்மார்த்தமான கேரக்டர்களை செய்ய முடியாமல் போய் விடும்!” என சொல்லி இருக்கிறார்.












