Tuesday, May 20, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கைதி பட அனுபவம் எப்படி இருந்தது?

admin by admin
October 18, 2019
in News
430 5
0
602
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

விஷால், தன்ஷிகா திருமணம்! ஆகஸ்ட் 29 ல் நடக்கிறது!!

காயங்களை பாடங்களாக ஏற்கிறேன்! பாடகி கெனிஷா பரபரப்பு பதிவு!!

யோகி பாபு – மேகா தாமஸ்  நடித்த  திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

 


அஞ்சாதே புகழ் நரேன் கைதி படத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு  முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.அவருடன் ஒரு சிறு நேர் காணல்…

“கார்த்தி இந்தப்படத்தில கைதி நீங்க யாரு ?”

“போலீஸ். ஸ்பெஷல் ஸ்டாஸ்க் ஃபோர்ஸ். முதல்ல கார்த்தி தான் எனக்கு போன் பண்ணினார். கார்த்தியும் நானும் நெருக்கமான நண்பர்கள். பர்ஸனலா எல்லாமே பேசிப்போம். இயக்குநர் இந்தக் கேரக்டருக்கு என் பேர சொன்னவுடனே கார்த்தி நான் போன் பண்றேன்ன்னு சொல்லி கூப்பிட்டிருக்கார்.

அஞ்சாதே படத்துக்கப்புறம் நிறைய போலீஸ் கேரக்டர் அது மாதிரியே இருக்கும்னு நான் பண்ணல. இதுல எப்படினு கேட்டேன். நல்ல கேரக்டர்னு சொன்னார்.
நீங்க பண்றீங்களானு கேட்டேன் ஆமானு சொன்னார்.

உடனே நான் ஒத்துக்கிட்டேன். கார்த்தி ஒரு படத்த அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க மாட்டார் அவர் இருக்கார். அப்புறம் டைரக்டர் லோகேஷோட மாநாகரம் நான் பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடிச்சது இப்படி ஒரு டீம்ல வாய்ப்பு கிடைக்கும்போது ஏன் பண்ணக்கூடாது. ஆனா லோகேஷ் கதை சொன்ன பத்து நிமிஷத்துல தெரிஞ்சுடுச்சு கண்டிப்பா சூப்பாரா இருக்கப்போகுதுனு. படம் நல்லா வந்திருக்கு”.

“அஞ்சாதே மாதிரி போலீஸ்  இன்னும் தமிழ்ல வரல. இந்தப்படத்தில அது மாதிரி மேனரிசம் எதும் இருக்கா ?”

“மேனரிசம் பண்றதுக்கு படத்தில நேரமே இல்ல. படமே ஒரு ஆபரேஷன்ல தான் ஆரம்பிக்கும். பரபரனு ஓடிட்டே இருக்கும். ஒரு சிச்சுவேஷன்ல மாட்டிக்கிற நல்ல போலிஸ் எப்படி இருப்பான் அவ்வளவுதான். ரெண்டாவது அவனுக்கு அடி பட்டிருக்கும் நீங்க டிரெய்லர்ல பாத்திருப்பீங்க. அந்தக்கையோட அவன் என்ன பண்றான் அது தான். படம் பாருங்க .”

“காட்டுக்குள்ல நிறைய ஷீட் பண்ணிருக்கீங்க எப்படி இருந்தது ?”

“முழுக்க நைட் ஷீட் தான்.  சென்னை தாண்டி செஙகல்பட்டு பக்கத்தில, அப்புறம் கேரளா பார்டர் வரைக்கும் ஷீட் பண்ணினோம். குளிர் தான் ரொம்ப புதுசா இருந்தது அதுவும் தமிழ்நாட்ல. 12 மணி வரைக்கும் ஓகே

ஆனா அதுக்கப்புறம் 2,3 மணிக்கு குளிர் பின்னும் நாங்க கூட பரவாயில்லை ஏன்னா எங்களுக்கு 1மணி நேரம், 2மணி நேரம் ரெஸ்ட் கிடைக்கும் ஆனா டெக்னிக்கல் டீமுக்கு அது எதுவும் இல்ல அவங்க தான் ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்காங்க.

எல்லாப் படத்திலயும் ஒரு கேப் இருக்கும் நாம எஞ்சாய் பண்ணலாம் ஷுட்டே கலகலப்பா இருக்கும். இதுல அப்படி கிடையாது. படமே ராவா இருக்கும். பரபரனு இருப்பாங்க ஆனா சினிமாவ  காதலிக்கிற ஒரு டீம். அவ்வளவு காதலோட எல்லோரும் வேலை பார்த்திருக்காங்க. நாங்களும் சந்தோஷமா வேலை பார்த்தோம் படம் எடுக்கும்போதே படம் சூப்பரா இருக்கும்னு நம்பிக்கை இருந்தது. அது சில படங்கள்ல மட்டும்தான் இருக்கும்”

“ஃபர்ஸ்ட் டைம் உங்களுக்கு ஹீரோயின் இல்லாம நடிக்கறீங்க ?”

“கார்த்திக்குக்கே  கிடையாது. எனக்குத் தெரிஞ்சு ஒரு பெரிய கமர்ஷியல் படத்தில ஹிரோயினே இல்லாத படம் இது தான். கார்த்திக்கு நிறைய தைரியம் வேணும் இப்படி படம் பண்ண.”

“கார்த்தியோட பயணம் எப்படி இருந்தது ?”

“கார்த்திகூட நிறைய பேசினேன் ஒன்னா இவ்வளவு நாள்  கூட இருந்தது இந்தபடத்தால தான் நடந்தது. கார்த்தி ரொம்ப தெளிவா இருக்கார். என்ன பண்றோம்கிறது அவருக்கு தெரிஞ்சுருக்கு. அவரோட படங்கள பார்த்தாலே தெரியும். இந்தப்படத்தில அவருக்கும் எனக்கும் நிறைய காட்சிகள் இருக்கு. அவருக்கு எனக்கும் நெருக்கமான நட்பு இருக்கறதால பண்ணும்போது ரொம்ப ஈஸியா இருந்தது. அதே மாதிரி அவருக்கு  ஒரு எமோஷனல் பக்கம் இருக்கும் அதில சூப்பரா ஃபெர்ஃபார்ம் பண்ணிருக்காரு. ரசிகர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.”

“முதல் படத்தில் மெகா ஹிட் ஹீரோ, அப்புறம் வில்லன் திடீர்னு காணாம போயிட்ட மாதிரி இருந்ததே ஏன் ?”

“ஏன்னு எனக்கே தெரியல, அஞ்சாதேக்கு அப்புறமா பூக்கடை ரவினு ஒரு படம் பண்ணேன் அது இன்னும் ரிலீஸாகல . தம்பிக்கோட்டைனு ஒரு படம் பண்ணேன் அதுவும் ஒர்க் அவுட் ஆகல. மிஷ்கின் கூப்பிடதால முகமூடில வில்லன் பண்ணினேன் மிஷ்கின்க்காக ஒரு படம் மட்டும்தான்னு முடிவு பண்ணித்தான் பண்ணினேன்.

ஆனா அதுக்கப்புறம் நிறைய வில்லன் ரோல் வந்தது எனக்கு விருப்பம் இல்ல. நல்ல கேரக்டர் வரட்டும் பண்ணலாம்னு வெயிட் பண்ணேன் நிறைய மலையாள படங்கள் பண்ணினேன். கத்துக்குட்டி வந்தது ஆனா தயாரிப்பு தரப்புல சில பிரச்சனைகள் படம்  சரியா வரல. இப்ப கைதி எனக்கு பெரிய பிரேக் கொடுக்கும்னு நம்புறேன்.

“லோகேஷ் எப்படி ?”

“சினிமா மட்டுமே வாழ்க்கையா நேசிக்கிற ஒரு ஆள் அதத் தவிர எதுவும் பேச மாட்டார். எப்பவும் வேலைதான். நான் ஒரு கமல் ஃபேன் அவர் என்னவிட பெரிய ஃபேன். நிறைய ஹாலிவுட் படம் பார்ப்பார் அதப்பத்தி பேசுவோம். என்ன புதுசுன்னா எல்லாரும் ஹாலிவுட் படம் பார்ப்பாங்க. இங்க அது மாதிரி பண்ண ஆசைப்பட்டு வித்தியாசமா பண்ணுவாங்க. படம் நல்லாருக்கும். ஆனா படம் பெரிசா போகாது. டீவியில பார்த்த நல்லாருக்கேனு சொல்லுவோம். இங்க படம் ஓட  இங்க இருக்க ஆடியன்ஸ்க்கு அதில இன்னும் சில விஷயங்கள் சேர்க்கனும் அதில் கில்லாடி லோகேஷ். அவர் வித்தியாசமா பண்ற அதே நேரத்தில இங்க இருக்க ஆடியன்ஸ்க்கு என்ன பண்ணனும்னு தெளிவு இருக்கார். அவர் பெரிய இடத்துக்கு போவாரு.”

“படம் பார்த்திட்டீங்களா எப்படி வந்திருக்கு ?”

“படம் எடுக்கும் போதே தெரியும் சூப்பரா வந்திருக்கு. முக்கியமான காரணம் கேமராமேன் சத்யன். முகமூடில அவர் கூட வேலை பார்த்திருக்கேன். இந்தப்படத்தில விசுவலா மிரட்டிருக்கார். லோகேஷ் கார்த்தி எல்லாரும் டிஸ்கஸ் பண்ணி ஒவ்வொரு ஷாட்டையும் புதுசா முயற்சி பண்ணி எடுத்திருக்காங்க. இப்படிபட்ட டீம்ல இருந்ததே சந்தோஷம்தான்.”

கார்த்தி நடிப்பில் டிரீம் வாரியர் சார்பில் எஸ்.ஆர், பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு மற்றும்  திருப்பூர் விவேக் இணைந்து  தயாரித்திருக்கும் திரைப்படம் “கைதி”. மாநகரம் படப்புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். பிலோமின்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். சதீஷ்குமார் கலைஇயக்கம் செய்துள்ளார். அன்பறிவ் சண்டைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். பொன் பார்த்திபன், லோகேஷ் கனகராஜ் இணைந்து வசனம்  எழுதியுள்ளனர்.

இப்படத்தில் கார்த்தியுடன் நடிகர்கள் நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் இணைந்து நடித்துள்ளனர்.

Tags: கார்த்திகைதிநரேன்
admin

admin

Related Posts

விஷால், தன்ஷிகா திருமணம்! ஆகஸ்ட் 29 ல் நடக்கிறது!!
News

விஷால், தன்ஷிகா திருமணம்! ஆகஸ்ட் 29 ல் நடக்கிறது!!

by admin
May 19, 2025
காயங்களை பாடங்களாக ஏற்கிறேன்! பாடகி கெனிஷா பரபரப்பு பதிவு!!
News

காயங்களை பாடங்களாக ஏற்கிறேன்! பாடகி கெனிஷா பரபரப்பு பதிவு!!

by admin
May 19, 2025
யோகி பாபு – மேகா தாமஸ்  நடித்த  திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News

யோகி பாபு – மேகா தாமஸ்  நடித்த  திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

by admin
May 19, 2025
சூர்யா- மமீதா பைஜூ நடிப்பில், வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் திரைப்படம் துவங்கியது!
News

சூர்யா- மமீதா பைஜூ நடிப்பில், வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் திரைப்படம் துவங்கியது!

by admin
May 19, 2025
“என்னுடைய சினிமா கரியர் – வாழ்வை மாற்றிய படம் மையல்” – நடிகர் சேது!
News

“என்னுடைய சினிமா கரியர் – வாழ்வை மாற்றிய படம் மையல்” – நடிகர் சேது!

by admin
May 19, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?