தமிழ்ப்படங்களில் அவ்வளவாக காணப்படாத இயக்குநர்களில் பி.வாசுவும் ஒருவர்.
சந்திரமுகி ஒரு பிளாக்பஸ்டர் படம்..
சூப்பர் ஸ்டார் ரஜினி, இளைய திலகம் பிரபு, இயக்குநர் பி.வாசு ஆகிய மூவருக்கும் அந்தப்படம் மிகப் பெரிய வெற்றி.
ஆனால் அதற்கு பின்னர் மூவரும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
தமிழ்த் திரையுலகம் முன்னணிக் கதாநாயகர்களின் கைக்குப் போய் விட்டது. அவர்களுக்காக அதாவது அவர்களது இமேஜ் உயர்வுக்கு இணங்கி இயங்குகிறவர்கள் வசம் போய் விட்டது. இதனால் பி.வாசு கர்நாடகம் பக்கமாக போய் விட்டார்.
அங்கு இவருக்காக காத்திருந்தவர் ஷிவராஜ் குமார். ராஜ்குமாரின் மகன். இவரும் வாசுவும் இணைந்து பணியாற்றிய படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தவை.!
ஆயுஷ்மான் பவ என்பது பி.வாசுவின் ஹாரர் மூவி. இந்த படத்தில் ஷிவராஜ்குமார் ,பிரபு,சுகாசினி மணிரத்னம் இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை கன்னட ராஜ்யம் நாளன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் சென்சாரில் தாமதமாகிவிட்டது.இதனால் நவ 15 ஆம் தேதி வருகிறது.