மழை விட்டும் தூவானம் விடாத கதையாகிப் போச்சு .நடிகை மீரா மிதுனின் நிலை. பிக்பாஸில் நடித்த கூலியே இன்னும் வந்து சேராத நிலையில் மேலும் மேலும் பல சிக்கல்களை அவரே தேடிக் கொள்கிறார். சொந்த கதை சோகக் கதையெல்லாம் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டதற்காக போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். போலீசின் சர்வ வல்லமை தெரிந்தும் மீரா மிதுன் மோதிக் கொண்டிருக்கிறார். இதோ போலீசின் புதிய வழக்கு.!
“தமிழ்ச்செல்வி என்கிற மீரா மிதுன்என்பவர் மீது எப் .2 எழும்பூர் குற்றப்பிரிவில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மீரா மிதுன் என்பவர் 03-11-19 மதியம் எழும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரேடிசன் ப்ளு என்ற ஹோட்டலில் ஊடக பேட்டி அளித்துள்ளார் அதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை அசிங்கமாக பேசியதாகவும் அதைக் கேட்ட ஓட்டல் ஊழியரை அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.”
இவ்வாறு போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது .இதற்கு மீரா மிதுன் மறுப்பு தெரிவித்து தனது டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.