எஸ்.டி ,ஆர் .வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் ‘மாநாடு ‘ படத்தின் பிரச்னையைத் தான் கையில் எடுத்துக் கொண்டார்.
மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது மாநாடு படத்துக்கு சிம்பு ஒத்துழைப்புத் தருவதில்லை என சொல்லி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் அல்லது அட்வான்ஸை திரும்பத் தரவேண்டும் என்பது அவரது கோரிக்கையாக இருந்தது .
இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் தனது மகனின் கால்ஷீட் தேதிகளை வீண் அடித்து விட்டார்கள் என குற்றம் சாட்டியிருந்தார். தன்னுடைய மகன் படத்தை முடித்துக் கொடுப்பார் ,காலை 10 மணியில் இருந்து மாலை 6மணி வரை அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என உறுதி அளித்ததாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இரு தரப்பில் இருந்தும் வெளி வரவில்லை. இந்த நிலையில்தான் சிம்பு நேற்று சென்னை கோவிலில் சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து கொண்டார். 48 நாள் பூஜை. மலைக்கு சென்று திரும்பியதும் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அநேகமாக டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கிறார்கள். சபரிமலை செல்வதற்கான மாலை அணிந்து கொள்ளும் நிகழ்சசியில் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் கலந்து கொண்டிருக்கிறார்.