சொன்னபடி இன்று தனது அலுவலகத்தில் தனது வாத்தியார் கே.பாலசந்தர் சிலையை கமல்ஹாசன் திறந்து வைத்தார்.
காலையிலேயே ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் அலுவலகம் களை கட்டியிருந்தது.
முக்கிய பிரமுகர்கள் அத்தனை பேரும் வந்திருந்தால் கட்டிடம் நிச்சயம் மூச்சு திணறி இருக்கும். அந்த காலத்துக் கட்டிடம் என்றாலும் இன்னமும் ஸ்டிராங்தான் கமலைப் போலவே.!
உட்கார இடமில்லாமல் போயிருக்கும்.
ரஜினியும் கமலும் இணைந்து வாத்தியார் கே.பாலசந்தர் சிலையை திறந்து வைத்தார்கள். இந்த காலத்திலும் அதிலும் சினிமாக்காரர்கள் தங்களின் குருவை மறக்காமல் இருப்பது ஆச்சரியம் தான்.
படங்களை பாருங்கள் வந்திருந்த பிரபலங்கள் யார் யாரென தெரியும்.