‘உல்லாச உலகம் உனக்கே சொந்தம் சுத்துடா சுத்துடா சுத்துடா ‘ என வாழ்கின்றவர்களில் நடிகை ஆண்ட்ரியாவும் ஒருவர்.பார்ட்டி கேர்ள்! தமிழ்ச் சினிமாவில் பாடத் தெரிந்த நடிகை.
இவரது வாழ்வில் ஒரு சோகம்.
“இணைந்து வாழ்ந்தோம் ஏமாற்றி விட்டார்.அவர் யாரென எனது ஆங்கில கவிதைத் தொகுப்பில் சுட்டிக் காட்டுவேன்”என்பதாக சொல்லி இருந்தார். பெங்களூருவில் வெளியிடுவதாக இருந்தது. அவரது ரகசிய வாழ்க்கையை அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருந்தனர்.
விழா நடந்தது.ஆனால் கவிதை புத்தகம் வெளிவரவில்லை.
அச்சுறுத்தல் !மிரட்டல்.! ( ரெண்டும் ஒன்னு தானே?)
அழகான பெண்களுக்கு ஆபத்து என்றால் ஆதரவாக கை கொடுக்க ஆதிக்க ஆணுலகத்தில் ஆளா இல்லை.?
ஆம்பள நான் இருக்கேன் என்று பிரமுகர் ஒருவர் ஆதரவு காட்டினார்.
மீண்டும் கவிதை புத்தகம் வரலாம் என்கிற நிலையில் மறுபடியும் மிரட்டலாம். கொலை மிரட்டல்! யார் அந்த பெரும்புள்ளி?
அரசியல் செல்வாக்கு உள்ளவர் என பேசிக்கொள்கிறார்கள்.( அப்படியானால் தேர்தல் நேரத்தில் பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது.)