அனுஷ்கா அருமையான நடிகை. அழகானவர், உயரத்திலும் ஒரு கம்பீரம்.
ஆனாலும் சரியான முடிவினை உரிய நேரத்தில் எடுக்காததால் தற்போது திரை உலக வாழ்க்கையில் ஒரு தேக்கம் .
சைஸ் ஜீரோ படத்தில் நடிப்பதற்காக உடம்பில் எக்கசக்கமாக சதை போட்டார். அவர் போட்ட சதை வெயிட்டுக்கு தகுந்த மாதிரி படம் ஓடி இருக்க வேண்டும்.விதி!
ஓடவில்லை.!
ஆனால் ஏறிய எடை உடம்பை விட்டு இறங்குவதாக இல்லை. எத்தனை சிகிச்சைகள்.எந்தெந்த நாடுகள்,போய் வந்தும் எக்ஸ்டிரா எடை குறையவில்லை. அவரே யோகா மாஸ்டர்.ஆனாலும் உடம்பு ஒத்துழைக்கவில்லையே !. இதனால் வாய்ப்புகள் திரும்பிப் பார்க்கவும் தயங்குகின்றன.
இந்த நிலையில்தான் நிசப்தம் என்கிற படத்தில் வாய்ப்பு கிடைத்தது .
இப்போது அவரை ஸ்லிம்மாக காட்டுவதற்கு பாகுபலி உத்தியை கையாளுகிறார்கள். கிராபிக்ஸ்!. ஆதனால் பெரும் பொருள் செலவு ஆகிறது.