
அண்மையில் பாராளுமன்றத்தில் கடுமையான விவாதம் நடந்த பிறகு ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
பிஜேபிக்கு முரட்டுத்தனமான மெஜாரிட்டி இருப்பதால் சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையில் அந்த குடியுரிமை திருத்த மசோதா அமைந்திருக்கிறது.
இன்று பாரதியின் பிறந்த நாள் .அவன் சொன்ன வேத வாக்கியம் “பேயாட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்றான்.
அந்த வாக்கியத்தை பிஜேபி அரசு அடிக்கடி நினைவூட்டுகிறது.
குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
“இனப்படுகொலைக்கு ஆளாகி இருக்கும் ஈழத்தமிழர்களும் பாகுபாட்டை எதிர்கொள்ளும் முஸ்லீம்களும் ஏன் மசோதாவிலிருந்து விலக்களிக்கப் படுகிறார்கள்.?” எனக் கேட்டிருக்கிறார்.












