சும்மா செவனேன்னு மும்பையில் முடங்கிக் கிடப்பதை விட அப்படியே லண்டனுக்குப் பறந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என நினைத்த ஸ்ரேயாவுக்கு அப்படி ஒரு துயரம் காத்திருக்கும் என்பது தெரியாமல் போயிருக்கிறது.
சண்டக்காரி படத்துக்காக போயிருந்தார்.
அங்கே பலத்த பாதுகாப்பு ஏரியா என அறிவிக்கப்பட்ட ஏரியாவுக்குள் போய் விட்டார். அந்த ஏரியாவில்தான் அன்றைய நாள் ஷூட்டிங்.
போனதும் துப்பாக்கி முனையில் அவரை லண்டன் போலீசார் வளைத்து விட்டார்கள். விசாரணை நடக்கிறது. தகவல் இயக்குநர் மாதேஷுக்கு போனதும் அலறி அடித்துக் கொண்டு அனுமதி பெற்ற ஆவணங்களுடன் வந்து விட்டார். போலீசாரிடம் காட்டி விளக்கம் சொன்னதும் அம்மணியை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.