Monday, January 19, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பாலாவையும் விக்ரமையும் பிரித்த பெரிய மனுஷன் யார்? ரகசியத்தை உடைக்கிறார் கேமராமேன்.!

admin by admin
December 18, 2019
in News
436 5
0
610
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்சினிமாவில் தங்களது  ஒளி ஓவியத்தால் சில திரைப்படங்களை காலத்தால் அழியாத காவியங்களாக மாற்றிய ஒளிப்பதிவாளர்கள் பலர். அவர்களில்  ஒருவர் சுகுமார். மைனா, கும்கி என இயற்கை சார்ந்த படங்களில் பணியாற்றியவர். 

தற்போது மாமனிதன், கும்கி-2, தேன் ஆகிய படங்களை முடித்துவிட்டு தெலுங்கு படம் ஒன்றுக்காக ஆந்திரா பக்கம் கிளம்புகிறார்.அவரது அனுபவங்களை சொல்கிறார் இங்கே!

You might also like

கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்

’மரகத நாணயம் 2’ம் பாகம் படத்தின் ‘புரோமோ’ வெளியானது !

ஆக்சன் திரில்லராக உருவான ‘காட்டாளன்’ !

“யானை என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது. அந்தவகையில் கும்கி படத்தை விட இன்னும் ஒருபடி மேலாக கும்கி-2 படம் குழந்தைகளை ரொம்பவே ஈர்க்கும் படமாக உருவாகியுள்ளது..

இந்தியாவுக்குள்ளேயே சினிமாக்காரர்கள் யாரும் இதுவரை நுழையாத ஒரு அருமையான ரம்மியமான வனப்பகுதியில் கும்கி 2 படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறோம்…

 படப்பிடிப்பின்போது வேறு காட்டு யானைகள் வந்து விடும் அபாயமும் இருந்ததால் அந்த பகுதியைச் சேர்ந்த 40க்கு மேற்பட்ட ஆட்களை பாதுகாப்புக்காக  தினசரி அழைத்துச் செல்ல வேண்டியதாகிவிட்டது.

 எந்தவித செயற்கை ஒளியும் இல்லாமல் இயற்கை ஒளியிலேயே படமாக்கி இருக்கிறோம்.. இயக்குநர் பிரபுசாலமன் கூட கும்கி படத்தை விட இதில் நமக்கு தாராளமாக செலவு செய்ய இன்னும் அதிகமாகவே பட்ஜெட் இருக்கிறது.. நீங்கள் இன்னும் நிறைய பயன்படுத்திக் கொள்ளலாமே என்று கூறியபோது வேண்டாமென திட்டவட்டமாக மறுத்துவிட்டேன்..

 நகைச்சுவையாக நகரும் படம் என்றாலும் இதில் சென்டிமென்ட்டுக்கும் ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

தர்மதுரை படத்திற்கு பிறகு இயக்குநர்  சீனு ராமசாமி மற்றும் விஜய்சேதுபதி இருவருடனும் இணைந்து மாமனிதன் படத்தில் பணியாற்றுகிறேன். இது தர்மதுரை மாதிரியான கதை அல்ல.. வேறு விதமான கதை.. 

அடுத்தவர்களைப் பார்த்து வாழ வேண்டாம், நமக்காக நாம் வாழ்வோம் என்கிற ஒரு செய்தியைச் சொல்லும் நடுத்தர வர்க்கத்து குடும்பத்து கதையாக இது இருக்கும்..

சீனு ராமசாமி…

இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பாகட்டும் காயத்ரியின் நடிப்பாகட்டும் நிச்சயமாக இந்த இருவருக்கும் சிறந்த நடிப்புக்கான தேசிய விருது கிடைத்தே ஆகவேண்டும்.. அப்படி கிடைக்கவில்லை என்றால் அந்த தேசிய விருதுக்கே மரியாதை இல்லை என்று உறுதியாக சொல்வேன்.. அந்த அளவுக்கு மிக இயல்பான அற்புதமான நடிப்பை இருவரும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்..

இந்தப்படத்திலும் புதிய முயற்சி ஒன்றை கையாண்டுள்ளோம். படத்தில் குறிப்பிட்ட நான்கு காட்சிகளை மட்டும் ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளோம்.. ஒவ்வொரு காட்சியும் சுமார் நான்கு நிமிடத்துக்கு குறையாத நீளம் கொண்டவை.. அவற்றை ஒரே டேக்கில் படமாக்கி இருக்கிறோம்.. காரணம் அந்தக்காட்சிகளை அப்படி ஒரே ஷாட்டில் சொன்னால் ரொம்பவே பொருத்தமானதாக இருக்கும் என  இயக்குநர் சீனு ராமசாமி விரும்பினார்.. 

இதை பல ஷாட்டுகளாக பிரித்து வழக்கம்போல ஏன் எடுக்கவேண்டும் ஒரே ஷாட்டில் எடுக்கலாமே என்று எனக்கு இந்த புதிய முயற்சியை பரீட்சித்து பார்க்க ஊக்கம் தந்தார்.. பக்காவான ரிகர்சல் பார்த்துவிட்டு சென்றதால் ஒரே டேக்கில் பிரமாதப்படுத்தி விட்டார்கள் விஜய்சேதுபதியும் காயத்ரியும்.

தர்மதுரை படத்தில் பார்த்த அதே விஜய்சேதுபதி தான் மாமனிதன் படத்திலும்.. எந்தவித மாற்றமும் இல்லாத மனிதர்.. கதாபாத்திரங்களுக்காக மட்டுமே தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய மனிதர். 

சங்கத்தமிழனில் நடித்திருக்கலாமா?

சங்கத்தமிழன் போன்ற கமர்ஷியல் படங்களில் விஜய்சேதுபதி நடிக்கலாமா என சிலர் கேட்கிறார்கள்.. விஜய்சேதுபதி போன்ற ஒரு நடிகனை இப்படித்தான் நடிக்க வேண்டும் என ஒரு வட்டத்திற்குள் அடக்கவே கூடாது.. எல்லா வகையான படங்களும் செய்வதற்கு தகுதியான ஒரு நடிகர் தான் அவர்..

தர்மதுரை படம் போலவே இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பையும் ஆண்டிப்பட்டி பகுதிகளில்தான் நடத்தி இருக்கிறோம்.. ஆனால் அந்தப்படத்தின் படப்பிடிப்பை விட தற்போது விஜய்சேதுபதிக்கான மிகப்பெரிய வரவேற்பு இருந்ததை காண முடிந்தது.. 

இந்த படத்துக்காக முதல் முறையாக இசைஞானி இளையராஜாவும் அவரது மகன் யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளார்கள். அப்படி ஒரு சிறப்புமிக்க படத்தில் நானும் இருக்கிறேன் என்பதே பெருமையாக இருக்கிறது.

 வரும் சம்மரில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதாக இருக்கிறார்கள்.. அதனால் தியேட்டருக்கு வரும் பார்வையாளர்களுக்கு அவ்வளவு குளுகுளு என இந்த படம் இருக்கும்.. மைனாவுக்குப் பிறகு இந்தப் படம் எனக்கு பெயர் வாங்கி கொடுக்கும் என உறுதியாக நம்புகிறேன்..

பாலா என்ன சொன்னார்?

வர்மா படத்தில் இயக்குநர் பாலாவுடன் பணிபுரிந்தது புதுவிதமான அனுபவம்.. அந்த படம் வெளியாக முடியாமல் போனதில் எங்களுக்கு வருத்தம் என்பதைவிட, ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைக்காமல் போகிறதே என்கிற ஆதங்கம் தான் அதிகமாக இருக்கிறது.. நான் இரண்டு படத்தையும் பார்த்துவிட்டேன்.. நிச்சயம் பாலாவின் ’வர்மா’ ஒருபடி மேலே தான் இருக்கிறது..

இந்த படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தான் இயக்குநர்  பாலா  இயக்கினார்.. படம் சென்சாருக்குப் போகும் கடைசி நாள்வரை இந்த படத்தை நிறுத்துவதற்கான எந்த ஒரு அடையாளமுமே தென்படவில்லை. 

ஆனால் தான் பணியாற்றும் படங்கள் எல்லாம் ஹிட் ஆவதால் தன்னை எப்போதுமே அறிவுஜீவி என நினைத்துக் கொள்ளும் ஒரு முக்கியமான நபரின் தூண்டுதலால், தயாரிப்பாளர் வேறு வழியின்றி எடுத்த திடீர் முடிவு அது. படத்தைப் பற்றிய விளக்கங்களை பாலாவிடம் கேட்டுவிட்டுப் பிறகு அவர்கள் முடிவெடுத்திருக்க வேண்டும்.. இயக்குநர் பாலாவைப் பொருத்தவரை இந்தப்படத்தை விக்ரமுக்காகத்தான் இயக்கினார்..

 நடிகர் விக்ரமுடன் எனக்கு 19 வருட நட்பு இருக்கிறது.. அவர்தான் எனக்கு முதல்முதலாக ஸ்டில் போட்டோகிராபர் ஆக வாய்ப்பு கொடுத்தவர்.. அவரது மகன் துருவ்வுக்கும் முதன்முதலாக நான்தான் ஸ்டில்ஸ் டெஸ்ட் எடுத்தேன் என்பது எனக்கு சந்தோஷமான விஷயம். அவரது குடும்பத்தில்  ஒரு நபர் போலத்தான் நான்.. 

பாலா-விக்ரம் இணைவார்களா?

விஜய்யின் தீவிர ரசிகர் தான் துருவ்.. அவரது படங்களை விரும்பி பார்ப்பவர்.. அதுமட்டுமல்ல இயல்பிலேயே அவருக்குள்ளும் நடிப்பு ஜீன் இருந்திருக்கிறது.. அத்துடன் அமெரிக்கா சென்ற நடிப்பு பயிற்சியும் பெற்றுவந்தார்.. 

துருவ்விடம் உள்ள ஒரு சிறப்பம்சம், அவர் தமிழில் பேசினால் தமிழ் நடிகர் மாதிரி தெரிவார்.. ஆங்கிலத்தில் பேசினால் அமெரிக்க நடிகர் போல அவரது முகமே மாறிவிடும்.. லோக்கலாக பேசினால் சென்னைப்பையன் போல, கொஞ்சம் மாடல் ஐடி வாலிபனாக பேசினால் அதேபோல என அவரது முகத்தோற்றம் விதம் விதமாக மாறுவது அவருக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்..

வர்மா படப்பிடிப்பின்போது எங்களுடன் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும் துருவ், அந்தப்படத்தின் டாக்டர் கதாபாத்திரத்திற்காக ஸ்டைலிஷாக ஆங்கிலம் பேசும்போது அவரது முகமே வேறுவிதமாக மாறுவதைக் கண்டு பாலாவே ஆச்சரியப்பட்டுப்போய், “இவன் அவங்க அப்பனையும் தாண்டிருவான்டா” என்று எங்களிடம் கூறியது இப்போதும் ஞாபகம் இருக்கிறது.. 

அதேபோல சில காட்சிகளில் பாலா மீண்டும் ஒன்மோர் கேட்பார்.. அப்போது துருவ்வின் நடிப்பைப் பார்த்துவிட்டு அவங்க அப்பா மாதிரியே இருக்கிறார் என்று நான் கூறுவேன்.. அதற்கு பாலா, “ஆமாப்பா.. துருவ்கிட்ட அவங்க அப்பன் தெரியக்கூடாது.. அதனாலதான் ஒன்மோர் போலாம்னு சொன்னேன்” என்பார்.

சூர்யா நடித்த நந்தா படத்தில் இருந்து இயக்குநர்  பாலாவுடன் பணிபுரிந்துள்ளேன்.. அப்போது இருந்த பாலா வேறு.. இப்போது இருக்கும் பாலா வேறு.. அதனால் துருவ்விற்கு பாலா ரொம்ப கஷ்டம் கொடுக்கவில்லை.. துருவ்வே உரிமை எடுத்துக்கொண்டு மாமா இன்னொரு முறை ஒன்மோர் பண்ணிக்கிறேனே என்று கேட்டால்கூட, இதுக்கு மேல நீ ஒன்மோர் பண்ணினாலும் எனக்கு இதுவே போதும் என்பார்.. 

சிறுவயதிலிருந்தே தான் பார்த்த, தூக்கி வளர்த்த குழந்தை என்பதால் துருவ்விற்கு படப்பிடிப்புத் தளத்தில் மிகுந்த சுதந்திரம் கொடுத்து அவரை மிகச் சிறந்த நடிகனாக மாற்றினார் பாலா. துருவ்விற்கு இது மிகவும் கொடுப்பினையான விஷயம்..

இனி வருங்காலத்தில் பாலா-துருவ் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.. இந்த ஒரு படத்தில் ஏற்பட்ட வருத்தத்தால் விக்ரமுடனான பலவருட நட்பில் எந்த விரிசலும் விழவில்லை.. ரீமேக் படம் என்பதால் பாலாவால் சிறப்பாக செய்யமுடியவில்லை அல்லது சிட்டி சப்ஜெக்ட் என்பதால் அவரால் அதை கையாள முடியவில்லை என்று சிலர் கூறுவதெல்லாம் முட்டாள்தனத்தின் உச்சம்.. “என்றார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.

 

Tags: கேமராமேன் சுகுமார்சீனு ராமசாமிதுருவ்பாலாவிக்ரம்விஜயசேதுபதிவிருது
admin

admin

Related Posts

கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்
News

கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்

by admin
January 18, 2026
’மரகத நாணயம் 2’ம் பாகம் படத்தின் ‘புரோமோ’ வெளியானது !
News

’மரகத நாணயம் 2’ம் பாகம் படத்தின் ‘புரோமோ’ வெளியானது !

by admin
January 17, 2026
ஆக்சன் திரில்லராக உருவான ‘காட்டாளன்’ !
News

ஆக்சன் திரில்லராக உருவான ‘காட்டாளன்’ !

by admin
January 17, 2026
‘சம்பரால எட்டிகட்டு’ : சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம் !
News

‘சம்பரால எட்டிகட்டு’ : சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம் !

by admin
January 17, 2026
உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2026’ விழா,
News

உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2026’ விழா,

by admin
January 17, 2026

Recent News

’மரகத நாணயம் 2’ம் பாகம் படத்தின் ‘புரோமோ’ வெளியானது !

’மரகத நாணயம் 2’ம் பாகம் படத்தின் ‘புரோமோ’ வெளியானது !

January 17, 2026
ஆக்சன் திரில்லராக உருவான ‘காட்டாளன்’ !

ஆக்சன் திரில்லராக உருவான ‘காட்டாளன்’ !

January 17, 2026
‘சம்பரால எட்டிகட்டு’ : சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம் !

‘சம்பரால எட்டிகட்டு’ : சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம் !

January 17, 2026
உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2026’ விழா,

உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2026’ விழா,

January 17, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?