
அமரர் கல்கியின் அமர காவியம் பொன்னியின் செல்வன்.
இதை படமாக்குவதற்கு அமரர் எம்.ஜி.ஆர்.முயன்றார்.பொருத்தமான ஆள். அறிவிப்புடன் நின்றுவிட்டது.இவரைப் போல உலக நாயகன் கமல்ஹாசனும் முயன்றார்.சரியான ஆள். ஆனாலும் ஆசையுடன் நின்று போனது.
தற்போது அந்த பிரமாண்டமான நாவலை லைகாவும் மணிரத்னமும் இணைந்து தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பும் தாய்லாந்தில் நடந்து கொண்டிருக்கிறது. தாய்லாந்தில் தமிழர்கலின் தொன்மையான அடையாளங்கள் இன்றும் தொலைந்து போகாமல் பாதுகாக்கப்படுகின்றன.இதனால் கதையின் களம் சரியாகப் பொருந்திப்போகிறது.
கல்கியின் கற்பனை உருவங்களுக்கு சரியான தகுதியான நடிகர்களைத்தான் இயக்குநர் மணிரத்னம் தேர்வு செய்திருக்கிறார்.ஆஜானுபாகனாக கம்பீரமாக கதையில் வலம் வருகிற கேரக்டர்களில் பழுவேட்டரையரும் ஒருவர்.கல்கி வர்ணிக்கும் போதே முரட்டுத்தன்மையும் ஆண்மையும் வீரமும் மிக்க ஒருவரை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுவார். அந்த கேரக்டருக்கு சரத் குமார் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்கிறார்கள். இன்னமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
தாயலாந்து சென்று படப்பிடிப்பை பார்த்து விட்டு திரும்பியிருக்கும் சுகாசினி மணிரத்னம் வியந்து போயிருக்கிறார்.
“படப்பிடிப்பு பிரமாதமாக நடந்து கொண்டிருக்கிறது.கல்கியின் ஒவ்வொரு கேரக்டரும் உயிர்ப்போடு வெளிப்பட்டிருக்கிறார்கள்.செட்டாகட்டும் பேசப்படுகிற மொழியாகட்டும் அற்புதமாக இருக்கின்றன “என்கிறார்.












