
சினிமாவில் இருந்து கொண்டே சைடு தொழிலாக ஹோட்டல் பிசினஸ்,கிரானைட் தொழில், திருமண மண்டபம் கட்டுதல்,பங்கு மார்க்கெட்டில் முதலீடு ,கல்லூரிகள் கட்டுதல் என பல்வேறு தொழில்களைதிரைத் தொழில் சார்ந்தவர்கள் வைத்திருக்கிறார்கள்.
ஆனால் யாருமே விவசாயத்தை முன்னிறுத்தவில்லை.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசனிடம் “சினிமாவை நேசிப்பதுபோல அடுத்து நீங்கள் நேசிப்பது எந்த தொழிலை” என்கிற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் சொன்ன பதில் ;
“விவசாயம் .அதைவிட உயர்வான தொழில் எதுவுமில்லை. “












