அதர்வா முரளி பிஸியான நடிகர்.இவர் எம்.கே.ஆர்.பி,. நிறுவனத்தின் இயக்குநர் ஆர். கண்ணன் தயாரித்து இயக்கும் புரடக்சன் 3 -யில் நடித்து வருகிறார். இன்னொரு படமான “எட்டு தோட்டாக்கள்” ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் “குருதி ஆட்டம்” படம் முடியும் தருவாயில் இருக்கிறது..
இயக்குநர் ஶ்ரீகணேஷ் இந்தப்படம் பற்றி கூறியதாவது…
“ரசிகர்களுக்கு கதையின் கரு இரு கதாப்பாத்திரங்களை மையமாக கொண்டது . ஒரு விபத்திற்கு பிறகு நாயகனுக்கும் ஒரு பெண்குழந்தைக்கும் ஏற்படும் உறவை, அவர்களது பயணத்தை கூறுவதாகும். ஆக்ஷன் திரில்லர் வகைப்படமாக இப்படம் இருந்தாலும் மிக அழுத்தமான செண்டிமெண்ட் இப்படத்தில் இருக்கும். இதனைச் சுற்றியே மொத்த கதையும் அமைக்கப்பட்டிருக்கும்” என்றார்.
சில தவிர்க்க முடியாத காரணங்களினால் படப்பிடிப்பு இடையில் தடைபட்டிருந்தாலும் இப்போது அனைத்து தடைகளும் நீங்கி, இம்மாத இறுதியில் மதுரை மாநகரில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.
டி முருகானந்தம் ராக்போர்ட் எண்டெர்டெயிண்ட்மென்ட் சார்பில் தயாரிக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க ராதிகா சரத்குமார், ராதாரவி முக்கிய கதாப்பத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை.