இது அரசியல்.! இந்திய அரசியல்.
ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கட்சியை விட்டு நீக்குவதை விட அவரை கவனிக்காமல் அம்போ என ஓரம் கட்டிவிட்டால் போதும்.!
உதாரணம் லால் கிஷன் அத்வானி. ஒரு காலத்தில் இவருக்கு மைக் பிடித்தவர்தான் இன்றைய பிரதமர் மோடி.வாஜ்பாய்க்கு அடுத்த பெரிய தலைவர் அத்வானி .
இன்றைக்கு அந்த அத்வானி எங்கே? பாராளுமன்றத்துக்கு வருவதும்தெரியவில்லை. போவதும் தெரியவில்லை.பாஜகவில்தான் இருக்கிறார் ஆனால் ஒதுங்க வைத்து விட்டார்கள்.
அதை போலத்தான் சத்ருகன் சின்காவின் இன்றைய நிலை.!
பாட்னா மக்கள் சபைத் தேர்தலில் இரண்டுதடவை பாஜக சார்பில் பலத்த மெஜாரிட்டியில் வெற்றி பெற்றவர். அவருக்கு இந்த தடவை சீட்டு இல்லை.
காரணம், அவர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.ராகுல் காந்தியை பாராட்டிப் பேசினார். கட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.அமைதியாக இருந்து விட்டது.அவரை கண்டு கொள்ளவில்லை.இதனால் தானாகவே சத்ருகனின் செல்வாக்கு கட்சியில் சரிந்து போனது. நடவடிக்கை எடுத்து அதன் மூலம் அவர் ஒரு கோஷ்டியை உருவாக்கிக்கொண்டு கடித்துக் கொண்டு இருக்க முடியாதல்லவா!
பாட்னாவில் சத்ருகனின் எதிர்ப்பாளருக்கு பாஜக சீட்டை ஒதுக்கி விட்டது.