மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்பி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு, சென்னை வந்தார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி;காந்தியாரின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் தற்போது இல்லை.
தமிழக அரசின் மீது சுமை கூடுவதை தான், நாம் இதில் கவனிக்க வேண்டும். ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்ட உதவி, இவையெல்லாம் குறைகிறது. அதை மீட்கவும், காக்கவும் தான் முயற்சி செய்ய வேண்டும். பாயிண்டை விட்டுவிட்டு,
வேறு இடத்தில் விளையாட கூடாது என்பதுதான் எனது கருத்து.
பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள், தமிழ்நாட்டிற்கு பிரச்சாரத்திற்கு வருவதால், தமிழக சட்டசபை தேர்தல், எப்படி அமையும் என்று நான் எப்படி சொல்ல முடியும்? அது குறித்து மக்கள் தான் சொல்ல முடியும்.
2026 தேர்தலில், திமுக கூட்டணிக்கு ஆதரவாக, கண்டிப்பாக
தேர்தல் பிரச்சாரம் செய்வேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.












