இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் எப்பேர்ப்பட்ட ஆளு!
சூப்பர் ஸ்டார்களான கமல்ஹாசன் ,ரஜினிகாந்த் ,மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ஆட்டி வைத்த முன்னணி இயக்குநர் .
அவரையே அசர வைத்திருக்கிறார்கள் ‘யாரோ’ சிலர்.!
“தயாரிப்பது சன் குழுமம் .நடிக்கப்போவது அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார். இயக்குவது கே.எஸ்.ரவிகுமார் .”
இப்படியொரு செய்தி டிவிட்டரில் அவரது கணக்கில் வெளிவந்தால் நம்புவார்களா மாட்டார்களா?
நம்பி விட்டார்களய்யா.!
அதிர்ந்து போய் விட்டாராய்யா ரவிகுமார்.!
“அது பொய்யான கணக்கில் என் பெயரில் வெளியாகிய செய்தி .நம்பி விடாதீர்கள் ” என்று அவசரமாக மறுப்புத் தெரிவித்திருக்கிறார் கே.எஸ்.ஆர்.!