வருமான வரிச்சோதனை ஒரே நாள் பரபரப்புடன் முடிவதில்லை.
“வாத்தியார் சாவாரா,வயித்தெரிச்சல் தீராதா” என்று ஆரம்பப்பள்ளி மாணவன் மனதுக்குள் வேண்டுவதைப்போல வருமானவரி சோதனைக்கு உட்பட்டவர்களும் கலங்கி கண்ணீர் வடிப்பார்கள் .
அவன் குற்றவாளியோ இல்லையோ ,நிரபராதியாகவே இருந்தாலும் மாட்டிக்கொண்டவன் அரசுக்கு வேண்டாதவனாக இருந்தால் குடைச்சல் கொடுப்பது மரபாகவே ஆகி விட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் வைத்து ‘அழகு’ பார்க்கவில்லையா?
அதைப்போல தளபதி விஜய்யியிடம் நடந்து கொள்ள முடியாது என்றாலும் அலுவலகத்துக்கு வரச்செய்து கேள்விகளால் குடைந்து எடுத்து விடுவார்கள் .
“ஆரம்பமாகி விட்டது அரூபத்தின் வேலைகள்” என்கிற வசனத்தைப் போல தளபதி விஜய் ,ஏஜிஎஸ் ,சினிமா பைனான்சியர்ஸ் அசோசியேசன் பிரமுகர் அன்புச்செழியன் ஆகியோரை நுங்கம்பாக்கத்தில் இருக்கிற வருமானவரி அலுவலகத்துக்கு வரச்சொல்லி சம்மன் அனுப்பி இருக்கிறார்கள்.
இன்று திங்கட்கிழமை ஆஜராக வேண்டும்.!