
எல்லா முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது என்பது ஒரு சாதனைதான்.!
அவருடன் நடிக்க மாட்டேன் இவருடன் நடிக்க மாட்டேன் என ஒதுங்குவதெல்லாம் அவர்களது வளர்ச்சிக்கு நல்லதில்லை.
என்றாலும் ,
நடிகர்களது ரசிகர்கள் தங்களது நடிகருக்காக விசுவாசம் காட்டுவது எல்லை கடந்து நிற்பதால் இணைந்து நடிப்பது என்பது சாத்தியமில்லாமல் போகிறது.
ஆனால் மக்கள் செல்வன் விஜய சேதுபதிக்கு மட்டும் எப்படி சாத்தியமாகிறது?
சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்திலும் நடித்திருக்கிறார். தளபதி விஜய்யின் படத்திலும் வில்லன் கேரக்டர். உப்பனா என்கிற தெலுங்கு படத்திலும் வில்லன்.
விஜய்சேதுபதியின் ரசிகர்கள் வித்தியாசப்படுகிறார்கள். தங்களின் ஹீரோ மற்ற படங்களில் வில்லனாக நடிப்பதிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும் ,கேரக்டரை தாழ்த்தி மற்றவர்க்கு குடை பிடிப்பது மாதிரி உயர்த்தி விடக்கூடாது. நேர்மையான ஒப்பீடு இருந்தாக வேண்டும் என நினைக்கிறார்கள்.
இப்படித்தான் இருக்கும் என்பது நமது அனுமானம்.
அல்டிமேட் ஸ்டார் ,தல அஜித்குமாருடன் விஜய் சேதுபதி நடிப்பாரா?
“வாய்ப்புகள் அமையுமானால் நடிப்பேன் “- இது மக்கள் செல்வனின் பதில் .












