
சிம்புவின் மனதை மாற்றியது எந்த போதி மரமோ தெரியாது.
ஆனால் தற்போது தன்னையும் உணர்ந்து தன்னை சுற்றியிருந்தோரையும் அறிந்து தனது வழி தனி வழி என சென்று கொண்டிருக்கிறார்.
அதை மனம் திறந்து சொல்வதற்கு தைரியம் வேண்டும்.அந்த தைரியமும் ஊக்கமும் இப்போது சிம்புவிடம் அதிகமாகவே இருக்கிறது.
“நான் வெற்றிபெற்ற பொது என்னை சுற்றி நிறைய பெரும் கூட்டமே இருந்தது. என்னை புகழ்ந்து தள்ளினார்கள்.
ஆனால் நான் சற்று சறுக்கியபோது அந்த பெருங்க்கூட்டம் காணாமல் போனது. இப்படி பல தடவை எனக்கு நடந்து இருக்கிறது.
நான் உயரம் இருந்த போதும் சரி ,தோல்விகளை சந்தித்த போதும் சரி என்னை விட்டு அகலாமல் வேறு எங்கும் செல்லாமல் என்னுடன் இருந்தவர்கள் எனதருமை ரசிகர்கள்தான்.
அவர்கள்தான் என்னை தாங்கிக் கொண்டார்கள். அவர்களை எப்படி மறக்க முடியும்.?
சின்னஞ்சிறு வயதில் இருந்தே என்னை ஆதரித்து வருகிற அவர்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் .இதோ திரும்பி விட்டேன்.
மாநாடு படத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் எல்லாமே இருக்கும் இனி எனது படங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.உங்களை விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன்,
என்னை சிலர் வளரவிடாமல் தடுத்துப்பார்த்தார்கள். நான் மேலே வரமுடியாமல் அடக்கப்பார்த்தார்கள்.ஒடுக்கப்பார்த்தார்கள் .என்னை ஜீரோவாக ஆக்கப்பார்த்தார்கள். ஆனால் நான் உயர்ந்து நிற்கிறேன். ஹீரோவாக இருக்கிறேன்.மக்கள் என்னை ஹீரோவாக ஆக்கியிருக்கிறார்கள்.
இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன்.நான் எதற்கும் கவலைப்படமாட்டேன் ” என்று சொல்கிறார் சிம்பு.
இவரை ஒடுக்க ,அடக்கப்பார்த்தவர்கள் யார் என்பதை பகிரங்கமாக சொல்லவில்லை. அவர்களின் பெயர்களை சொல்வதற்கும் காலம் வரும் என்று நம்புவோம்.












