என்ன நடக்குதுன்னே தெரியல. நேத்துதான் பாரம் படத்துக்கு போஸ்டர் ஓட்டினார்னு நியூஸ் வந்தது…மிஸ்டர் மிஷ்கின்சார் என்னதான் நடக்குதுன்னு சொல்லுங்களேன்!
விஷால் பிலிம் பாக்டரி தயாரிக்கிற துப்பறிவாளன் 2 படத்திலேர்ந்து டைரக்டர் மிஷ்கினை தூக்கியாச்சு.அவருக்குப் பதிலாக விஷாலே டைரக்ட் பண்ணப்போறார் ..இது செய்தி.
என்ன காரணம்.?
மிஷ்கின் இயக்கிய உதயநிதியின் சைக்கோ படம் சக்ஸஸ் என்பதால் தன்னுடைய சம்பளத்தை அதிகமாக கேட்டார் மிஷ்கின் .இங்கிருந்துதான் பிரச்னை ஆரம்பம் என்கிறது ஒரு தகவல்.
லண்டனில் தொடங்கிய துப்பறிவாளன் 2 படத்தின் பாதி வேலை முடிந்து விட்ட நிலையில் மீதி வேலைய முடிப்பதற்கு கூடுதலாக 40 கோடி ரூபாய் தேவை என்று மிஷ்கின் கேட்டதாகவும் ,இது பட்ஜெட்டை மீறிய தொகை என்பதால் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் வேறுபாடு ஏற்பட்டது என்கிறது மற்றோரு தகவல்.
“நான் கேட்டது 40 கோடி அல்ல ,400 கோடி “என்று கிண்டலடிக்கிறது இன்னொரு செய்தி.
ஆனால் படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறிவிட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது.