மனிதர்கள் மறந்துவிட்ட தமிழக சாதனையாளர்களில் அமரர் ம.சிங்காரவேலரும் ஒருவர்.
இந்திய துணைக்கண்டத்தில் முதன் முதலாக ‘தொழிற்சங்கத்தை அமைத்த பொதுவுடமைக் கட்சியின் முதல் போராளி..
1923-ல் இந்தியாவில் முதல் மே நாள் இவரால் கொண்டாடப்பட்டது.
மீனவ சமுதாயத்தில் பிறந்தவர்.புத்த சமயத்தைத் தழுவியவர்.
பேரறிஞர் அண்ணா சொல்லுவார் ,”காந்தி புராணம் ,கந்த புராணம் பேசும் நபர்களை கொண்டாடும் நபர்களை கொண்டாடும் மக்கள் இவரை சாதாரணமானவர் என்று நினைத்துவிட்டனர் “என்றார் .
பாவேந்தன் பாரதிதாசன் மெய் சிலிர்த்தான் இப்படி.!
“சிங்காரவேலனைப்போல் எங்கேனும் கண்டதுண்டோ?”
பொங்கிய சீர்திருத்தம் பொலிந்ததும் அவனால்
பொய்புரட் டறியாமை பொசிந்ததும் அவனால்
சங்கம் தொழிலாளர்க் கமைந்ததும் அவனால்
தமிழர்க்குப் புத்தெண்மை புகுந்ததும் அவனால்
மூலதனத்தின் பொருள் புரிந்ததும் அவனால்
புதுவுலகக்கனா முளைத்ததும் அவனால்
கோலப் பொதுவுடைமை கிளைத்ததும் அவனால்
கூடின அறிவியல், அரசியல் அவனால்!
தோழமை உணர்வு தோன்றிய தவனால்
தூய தன்மானம் தொடர்ந்ததும் அவனால்
ஏழ்மைஇலாக் கொள்கை எழுந்ததும் அவனால்
எல்லோர்க்கும் எல்லாம் என்றுணர்ந்ததும் அவனால்!
போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி
பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!”
சிங்காரவேலரை இன்று நினைப்பது எதனால்?
அவரது கொள்ளுப்பேத்தி என்.சரசு இன்று மக்கள் நீதி மய்யத்தில் இணைத்துக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக மய்யம் அனுப்பிய செய்திக்குறிப்பு :
“தென்னிந்தியாவின் “முதல் கம்யூனிஸ்ட்” என்று சொல்லப்படும் போராளி, சிந்தனைச்சிற்பி காலஞ்சென்ற . ம.சிங்காரவேலரின் கொள்ளுப்பேத்தி செல்வி.என் .சரசு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் .கமல் ஹாசன் முன்னிலையில் தலைமை நிலையத்தில் கட்சியில் இணைந்தார்.
நித்தியகுமார், திருமதி கிருஷ்ணவேணி ஆகியோரின் மகள் செல்வி.சரசு. அவருடன் அவரது
சகோதரர்.ரமேஷ்குமார்,திருமதி.கனகா ரமேஷ்குமார் , மகன்கள்
தினேஷ்பாபு, லோகேஷ் பாபு மற்றும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்
அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள் என பலரும் கமல் ஹாசன்
முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர்.
நம்மவர் அவர்களை வரவேற்று வாழ்த்தினார்.”என்கிறது செய்தி குறிப்பு.