தளபதி விஜய் படம் வருகிறதென்றால் விவகாரத்தை முதலில் இழுப்பது பா.ஜ.க.வை சேர்ந்த பிரமுகர்களாகத்தான் இருப்பார்கள்.
குறிப்பாக எச்.ராஜா. இவர்தான் மதம் சார்ந்த பிரச்னையை முன்னர் கிளப்பியிருந்தார்
விஜய் ஒரு கிறித்தவர் என்பதை ‘துப்பறிந்து ;சொன்னவர்.! வாக்காளர் அட்டையில் விஜய் பெயர் ஜோசப் விஜய் என்றுதான் இருந்தது. இது ஒன்றும் மறைத்து வைக்கப்படவில்லை.
இதன் பிறகு கிறிஸ்தவ முறைப்படிதான் விஜய் கல்யாணம் செய்து கொண்டார் என்கிற புதிய புரளியை சிலர் கிளப்பினார்கள்.
போட்டோக்களுடன் இந்து முறைப்படிதான் கல்யாணம் நடந்தது என்பதை விஜய் தரப்பு வெளியிட்டது. புரளியாளர்கள் அமைதியானார்கள்.
இத்தகைய புரளியாளர்களுக்கு ‘மாஸ்டர் ‘படத்தில் சரியான சவுக்கடி இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
மாஸ்டர் படக் கதையில் தளபதி விஜய்யின் பெயர் ‘ஜான் துரை ராமசாமி ‘ என்று வைத்திருக்கிறார்களாம் .
பணியாற்றுகின்ற கல்லூரியின் பெயர் ‘புனித ஜெப்ரே கலை மற்றும் அறிவியல் கல்லூரி’..