
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இழுத்து மூடப்பட்டு தற்போது தனி அதிகாரியின் மேற்பார்வையில் இருக்கிறது.
அரசாங்கத்தை எதிர்த்து எந்த அமைப்பும் செயல்பட முடியாது என்பதற்கு நல்ல உதாரணம்தான் தனி அதிகாரிகள் நியமனம்.நடிகர் சங்கமும் தனி அதிகாரியின் வசம்தான் இருக்கிறது.தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை ஜூன் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்பது உயர்நீதிமன்றத்தின் உத்திரவு.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது பொய்யாகிப்போன பழைய மொழி.
தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 4 அணிகள் தயாராகி இருக்கின்றன..அம்மா கிரியேஷன்ஸ் சிவா தலைமையில் ஒரு குழு தனது வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது.













