
தார்க்குச்சியை வைத்து குத்தினால் அந்த காளை பொறுத்துக் கொள்ளும் வரைதான் குத்துவனுக்கு பாதுகாப்பு.!
மிரண்டுவிட்டால் ஊருக்குத்தான் ஆபத்து.!
பாலிவுட்டின் பிரபல கபூர் குடும்பத்தை சேர்ந்தவர் ரிஷிகபூர். பாபி படம் இவரை உயரம் கொண்டு சென்றது.
இவரது வாரிசு ரன்பீர்கபூர்..
புற்று நோய் காரணமாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பிஇருக்கிறார் ரிஷி. !சோசியல் மீடியாவில் அடிக்கடி விவகாரங்களை சந்திப்பவர். தற்போது கொரானாவை பற்றி கருத்து சொல்லி பிரபலமாகி இருக்கிறார்
முழு அடைப்பை வரவேற்று பதிவிட்ட இவரை “மது பாட்டில்களை சேமித்து வைத்து இருக்கிறார் “என கடுப்புடன் ஒருவர் சொல்லி இருந்தார்.
கோபம் வருமா வராதா?
“சகோதர இந்தியர்களே! டி .வி.நிகழ்ச்சிகளை பார்க்கிறபோது நமக்கு இது போதாது, எமர்ஜென்சிதான் வேண்டும் என்கிற எண்ணம்தான் வருகிறது. போலீசாரையும் சுகாதார ஊழியர்களையும் அடிப்பதை பார்த்ததும் அவசர நிலையின் அவசியம் புரியவில்லையா?” என கேட்டிருக்கிறார்.












