
கொரானாவுக்கு பயந்து வீட்டுக்குள் முடங்கி இருந்தாலும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அடங்கிய பாடாக இல்லை.
காலம் காலமாக இருந்து வருகிற ஆணாதிக்கம்,அல்லது பெண்ணுக்கெதிரான அடக்குமுறை குறைவதும் இல்லை.அடங்குவதும் இல்லை.
ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கான தேசிய ஆணையத்தில் 257 புகார்கள் வந்திருக்கின்றன.
இவற்றில் ‘வீட்டுக்குள் வன்முறை ‘பற்றிய புகார்கள் மட்டும் 69 .
வன்முறை பற்றி போலீசில் புகார் செய்வதற்கு புருஷனின் துணையை நாடினால் அது குடும்பத்தினரின் கோபத்தை அதிகரிக்க செய்து விடும். கணவனே எதிராக திரும்புவதற்கும் வழி வகுத்துவிடும் .என் செய்வது என்கிற தவிப்பில் பெண்கள்.!
அடிக்கடி உறவு கொள்ள பெண்ணை வற்புறுத்துவதும் வன்முறைதான்.!
வீட்டில் சும்மாவே இருப்பது போர் அடிக்கிறது என பகலில் பாலுறவு கொள்ள வற்புறுத்துவதும் வன்முறைதான்.!
இப்படி எத்தனையோ வகைகள் இருக்கின்றன.
வீட்டு வேலைகள் மொத்தமும் மருமகள் மீது சுமத்தி விட்டு மாமியார் ஹாயாக ஆளை நீட்டி படுத்திருப்பதும் வன்முறையே!












