எச்.வினோத் இயக்கத்தில்,அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்திருப்பவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு சில நாட்கள் முன்பு வரை சென்னை, பெங்களூரு என சில நகரங்களுக்கு படப்பிடிப்புக்காக விமானத்தில் அடிக்கடி பறந்து வந்தார்.
அவர் பயணம் செய்த விமானம் ஒன்றில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், இதை உறுதி செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள், ஷ்ரத்தா ஸ்ரீநாத் வீட்டிற்கு சென்று அவரை தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொண்டதாகவும், சுகாதார துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் தற்போது தனது வீட்டிலேயே தன்னைத்தானே 14 நாட்கள் தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் கேட்ட போது,”நான் மார்ச் 12 முதல் 15 வரை ஹைதராபாத் மற்றும் சென்னை சென்றேன், ஆனால்,குறிப்பிடப்பட்ட விமானத்தில் பாதிக்கப்பட்ட நபர் யாரும் இல்லை
மேலும், கர்நாடக மருத்துவ அதிகாரிகள் யாரும் என் வீட்டிற்கு வந்து சுயமாக தனிமைப்படுத்த என்னை கேட்டுக்கொள்ளவும் இல்லை.
மேலும், கர்நாடக மருத்துவ அதிகாரிகள் யாரும் என் வீட்டிற்கு வந்து சுயமாக தனிமைப்படுத்த என்னை கேட்டுக்கொள்ளவும் இல்லை.
இது குறித்து நான் நிச்சயமாக எனது சமூக ஊடகங்களில் பேசவே வில்லை . இதை நான் எனது டுவிட்டரில் கூறியுள்ளேன்.“என்றார்.
“எனது உறவினர் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் 14 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்த நான் தேர்வு செய்தேன், அதை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் செய்யச் சொன்னேன் – ஒவ்வொரு பொறுப்பான மற்றும் விழிப்புணர்வுள்ள குடிமகனும் இருந்ததால், சர்வதேச , உள்நாட்டு பயணங்களுக்குப் பிறகு அதைச் செய்ய வேண்டும்.” என தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.