சூப்பர் ஸ்டார் ரஜினி திரைத்தொழில் சார்ந்த சங்கங்களுக்கு கொரானா நிவாரணமாக ரொக்கம்,உணவுப் பொருட்களை கொடுத்திருக்கிறார். நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம் உள்ளிட்ட நலிவடைந்த கலைஞர்களுக்கு 24 டன்கள் அரிசி, பருப்பு உள்பட மளிகை பொருட்களை வழங்கிஇருக்கிறார்.
இந்த பொருட்கள் தற்போது அந்தந்த சங்க உறுப்பினர்களுக்கு சங்கத்தை சார்ந்தவர்கள் கொடுத்து வருகிறார்கள்.
, தமிழ்த்திரைப்பட இயக்குநர் சங்க பொருளாளர் , பேரரசு தனது சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பதிவு செய்திருக்கிறார்
“,ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம்! இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை,மளிகைப் பொருட்கள் வழங்கும் போது “பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம் “என்ற நிபந்தனையோடுதான் கொடுத்தார்.அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம். பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது!”என்று மெய் சிலிர்த்திருக்கிறார்.
இதுவும் பேரரசுக்கு ஒரு வித விளம்பரம்தான்!