டூ வீலர் வைத்திருக்கிறவர்கள் தலையில் பொங்கல் அடுப்பு வைப்பது என்றால் மத்திய மாநில அரசுகளுக்கு கொண்டாட்டம்.
பெட்ரோல் அவர்கள் மட்டும்தான் உபயோகிக்கிறார்களா பெரு முதலாளிகளும்தான் பயன்படுத்துகிறார்கள். ஆகவே டூ வீலர் வைத்திருப்பவர்கள் சிறிதளவே பாதிக்கப்படுகிறார்கள் .அவர்கள் கொடுத்துதான் ஆகவேண்டும் என்று பெட்ரோல் டீசல் விலை உயர்வை நியாயப்படுத்துகிறார்கள்.
லாரிகளில் வருகிற உணவுப்பொருட்கள் மட்டுமின்றி ஏனைய பொருட்களுக்கும் விலை வாசி உயர்வுக்கு காரணமாகிறது என்பதை வசதியாக மறந்து விடுவார்கள்.இல்லை நடிப்பார்கள். பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.”சொன்னால் கேக்குறாய்ங்களா”என்கிற பாணியில் கண்டித்திருக்கிறார்.
“உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்பு கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதை செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்.”என்பதாக கூறி இருக்கிறார்.