ராம்கோபால்வர்மா என்கிற சர்ச்சை இயக்குநருக்கு விவகாரம் பண்ணவில்லை என்றால் போதை ஏறாது போலிருக்கு.!
கிளப்பில் ஆடுகிறபோது பீரை தலையில் ஊற்றிக்கொண்டு நேரடியாக போதையை மூளைக்குள் ஏற்றுகிற புத்திசாலி ..அதை வீடியோவாகவும் போட்டுக்கொள்வார்.
மாண்பமை மோடி அரசு “மதுச்சாலைகளையும் திறந்து கொள்ளலாம்” என்று அனுமதித்த பிறகு சமூக விலகல் என்பதே இல்லாமல் பல இடங்களில் தடியடி நடத்த வேண்டியதாயிற்று. ஆனால் சில இடங்களில் டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணினார்கள்.
பெண்கள் வரிசையில் நின்றது ராம்கோபால்வர்மாவுக்கு ஆச்சர்யமாகிவிட்டது போலும்.! கிளப்புகளில் பெண்களுடன் சரக்கடித்தவருக்கு அது வியப்பாக தோன்றியிருக்கிறது.
படமெடுத்து ஆகிவிட்டார்.
“பிராந்திக்கடையில் வரிசையில் நிற்பது யார் என்று தெரிகிறதா?பாருங்கள்.!குடிகார ஆண்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்கவேண்டும் என்று சொல்கிறவர்களே பாருங்கள்”என்று படத்தைப் பதிவு செய்திருந்தார்.
சோனா மொகபத்ரா என்கிற இந்திப் பாடகி.பிரபலமானவர். பாலிவுட்டில் அடிக்கடி மோதுகிறவர் என்கிற பெயர் உண்டு.
ராம்கோபால்வர்மாவை பூரி கட்டையால் அடிப்பது மாதிரியான பதில்.!
“பெண்களுக்கும் ஆண்களைப்போலவே ,சரக்கு வாங்க ,அதை குடிக்க உரிமை இருக்கு. ஆனா குடித்துவிட்டு அராஜகம் பண்ணத்தான் யாருக்கும் உரிமை இல்லை “என்பதாக பதில் சொல்லியிருக்கிறார்.