- பூ உறங்குது பொழுதும் உறங்குது
- நீயுறங்கவில்லை-நிலவே
- கானுறங்குது காற்றும் உறங்குது
- நானுறங்கவில்லை….
- மான் உறங்குது மயிலும் உறங்குது
- மனம் உறங்கவில்லை -என்
- வழியுறங்குது மொழியும் உறங்குது
- விழியுறங்கவில்லை ….
ஏன் ,எதனால் இந்த நிலை அவளுக்கு?
தலைவனுக்காக காதலி காத்திருக்கிறாள் ,ஆனால் அவனைத்தான் காணவில்லை. எல்லா உயிரினங்களும் உறங்குகிறபோது இவளுக்கு மட்டும் விழியுறங்கவில்லை .மனமும் உறங்கவில்லை.
இதைத்தான் உண்மையான காதல் என்பார் கவிராஜன் கண்ணதாசன்.
ஆக ‘உண்மையான காதல்’ இருக்கிறது.இது திரிஷாவுக்கும் தெரிந்தே இருக்கிறது.
அது இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்கிறார்.
“ஆழமான ,உண்மையான ,பைத்தியக்காரத்தனமானது என்று கூட சொல்லிக்கொள் .உண்மையான காதல் இருக்கிறது.அந்த காதல் இல்லாமல் வாழ்க்கை முழுமையாகாது!”
அம்மாடியோவ்….இவ்வளவு அழுத்தம் கொடுத்து சொல்கிறாரே திரிஷா ,இவருடைய வாழ்க்கையில் அந்த காதல் இருக்கிறதா?
பொய் சொல்கிறாரா,உண்மையைச் சொல்கிறாரா ..”நான் இதுவரை சந்திக்கவில்லை” என்கிறார். மெய்யாலுமா திரிஷா கிருஷ்ணன்?
“ஆனாலும் உண்மையான காதலை கண்டிப்பாக சந்திப்பேன்.கல்யாணமும் செய்து கொள்வேன் “என்கிறார்.