
தமிழகத்துக்கு இசைஞானி எப்படியோ அதைப்போல ஆந்திரத்துக்கு கீரவாணி.
பாகுபலி உள்பட 200 படங்களுக்கும் அதிகமாக இசை அமைத்திருக்கிறார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான எம்எம் கீரவாணி 30 வருடங்களுக்கும் மேலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ராஜமவுலியின் நெருங்கிய உறவினரான இவர் ஆர்ஆர்ஆர் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
.தெலுங்கு சினிமாவின் இசையுலகில் உச்சம் தொட்டவர் “இனி இசை அமைப்பதில்லை ஒய்வு பெறப்போகிறேன் என அறிவித்திருப்பது தெலுங்கு பட உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.












