தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடாக இல்லை.
நம்ம அமைச்சர்களும் மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் “மூணு நாளில் போய் விடும்” “இது பணக்கார நோய் “என்றெல்லாம் சொல்லிப்பார்த்தார்கள் .
ஆனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகியே வருகிறது. லாக்டவுன் விதிக்கப்பட்டும் இந்த வைரஸ் கட்டுக்குள்அடங்குவதாக இல்லை. அதிகபட்ச பாதிப்பை சந்திக்கும் மாநிலமாக மகாராஷ்ட்ரா இருக்கிறது. இரண்டாம் இடத்தில் நமது தமிழகம் இருக்கிறது.
எதிர்பாராத இடங்களுக்கெல்லாம் கொரானா வைரஸ் விசிட் பண்ணி விடுகிறது.
ராஜா அண்ணாமலைபுரம் பக்கமாக தற்போது கொரானாவின் பார்வை இருக்கிறது.
,தமிழில் கிருஷ்ணா நடித்த கழுகு, சிவகார்த்திகேயன், விமல் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, சிம்புதேவனின் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை பிந்து மாதவி.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார் .பிரபலமானார்.
தற்போது மயன், யாருக்கும் அஞ்சேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துவரும் அவர், லாக்டவுன் காரணமாக வீட்டில் முடங்கி உள்ளார்.
ராஜா அண்ணாமலைபுரத்தில் நடிகை பிந்து மாதவி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் குடியிருப்புக்கு சீல் வைத்துவிட்டார்கள்.
இதை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ள பிந்து மாதவி, இதன் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தானும் 14 நாள் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

|
One of the resident in my apartment is tested covid positive and so it’s self isolation for all of us in the building for the next 14 days…. #redzone pic.twitter.com/l1MaTP7UDm
— bindu madhavi (@thebindumadhavi) May 30, 2020