இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் இன்று திடீர் என தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 34 .
சுஷாந்த் சிங் திடீர் என தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .கடந்த ஒருவாரம் முன்பு சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன் 14 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது .
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை குறித்து மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச் சம்பவம் மும்பை திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.