நிகேஷா படேலை மறந்திருக்க மாட்டீங்களே.! மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்,பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்திருப்பவர். லண்டன் வாசி .மிஸ் வேல்ஸ் விருது வாங்கியவர்,!தெலுங்கில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.
மறைந்த பாலிவுட் நடிகர் தேவ் ஆனந்தின் அழைப்பின் பேரில் இந்திக்கு வந்தார் .அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது .குஜராத்தி குடும்பம்.
மறைந்த நடிகர் சுஷாந்தின் இறுதிச் சடங்குக்கு பாலிவுட்டின் பெரிய நடிகர்கள் ஏன் வரவில்லை என்பது பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார்,
“நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறேன். பாலிவுட்டின் பெரிய நடிகர்கள் யாரும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு ஏன் மரியாதை செலுத்தவில்லை? எங்கே போச்சு மனிதத்தன்மை?மதிய சாப்பாட்டில் பிசியாக இருந்து விட்டார்களா?” என்று கேட்டிருக்கிறார்.