நடிகர் விஜய்க்கு இயக்குனர் பாரதிராஜா உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். ரஜினியின் பிறந்த நாளுக்குக்கூட அவர் இப்படி கூறியதில்லை என்கிற அளவுக்கு பாராட்டி இருக்கிறார். இளைஞர்களின் சொத்து விஜய் என்பதாக சொல்லியிருக்கிறார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளபக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ”
“என் கலைப் பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை.
இன்று வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின் இளைஞர்களின், சொத்தாக உலகமே, கொண்டாடப்படும் “விஜய்க்கு” இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
காதலாகட்டும், நடுத்தர குடும்ப கதாபாத்திரமாகட்டும் நையாண்டி, நக்கலுக்கான அந்த , உடல் பாவனை நடனத்தின் நளினம், சண்டைக்காட்சிகள், அதிலும் மேலாக கோடிக் கணக்கான ரசிகர்களை உலகம் முழுவதும் ஈர்த்து வைத்திருக்கின்ற, வெற்றியின் ‘வி’ என்ற முதல் எழுத்தாகக் கொண்ட விஜய்க்கு 46வது பிறந்த நாளில், எல்லாசிறப்பும் பெற்று, நீடூழிவாழ பாசத்துடன் வாழ்த்துகிறேன் அன்புடன் பாரதிராஜா” என குறிப்பிட்டுள்ளார்.
பாரதிராஜாவின் இந்த பதிவைப் பார்த்த ஒரு நெட்டிசன், அப்பப்பா… இந்த இமயத்தின் மனதில் இப்படி ஒரு ஏக்கம் இருக்கிறதா… நடந்திருந்தால்..ஆஹா… எப்படி இருந்திருக்கும். இப்போதும் நீங்கள் நினைத்தால் முடியும் இமயமே. அந்த கூட்டணியை எதிர்பார்க்கிறோம். இமயம், தளபதி, ஏஆர் ரஹ்மான், வைரமுத்து என பதிவிட்டுள்ளார்.இப்பதிவு வைரலாகி வருகிறது.