கோலமாவு கோகிலா படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் நெல்சன் திலீப்குமார், சிவகார்த்திகேயன் தயாரித்து, நடித்து வரும் ‘டாக்டர்’ படத்தை இயக்கி வருகிறார்.
தெலுங்கு நடிகை பிரியங்கா அருள் மோகன் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் தயாரித்து, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான,பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான கனா திரைப்படம் தெலுங்கிலும் நல்ல வெற்றியை பெற்ற நிலையில், தற்போது இந்தியில் உருவாகப் போவதாக கூறப்படுகிறது
தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கதாபாத்திரத்தில்,இந்தியில் நடிக்கும் நடிகை யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.மேலும், கனா படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டால், அந்த படத்தில் கிரிக்கெட் கோச்சாக நடித்த சிவகார்த்திகேயனே, பாலிவுட்டிலும் நடிக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், இந்த படம் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
, இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில்,சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது