நடிகர் விக்ரம் தமிழ்ச் சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவர்,
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறவர்.
இமைக்கா நொடிகள் படத்தை தொடர்ந்து , விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.
இதில்,விக்ரமுக்கு ஜோடியாக ‘கே.ஜி.எப்’ ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார்.
7 விதமான தோற்றங்களில் விக்ரம் நடித்து வரும் இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம் பெற்றுள்ள தும்பி துள்ளல் என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இப்படம் ‘ஸ்பிலிட்’ என்ற ஆங்கில பட த்தின் அப்பட்டமான தழுவல் என இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களுடனான சந்திப்பில் ஒருவர், ‘கோப்ரா படம் ‘split’ என்ற படத்தின் இன்ஸ்பிரஷனா’ என கேள்வி எழுப்பினார். உடனடியாக இதை மறுத்த அஜய்ஞானமுத்து “எனக்கு தெரிந்த வரையில், கண்டிப்பாக கிடையாது” என கூறியுள்ளார்.