
இருவரும் நெஞ்சு சட்டையை பிடித்து குலுக்காத குறையாக வார்த்தை வெடிகுண்டுகளை வீசி பலத்த சேதத்துக்கு ஆளானார்கள்.
மிஷ்கினும் விஷாலும் இப்படி மோதுவார்கள் என்று யாரும் எதிர்பாராத நிலையில் வாடா போடா சண்டை நடந்தது.
அப்படி என்னதான் நடந்தது?
மிஸ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன்’ படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் தொடங்கப்பட்டது.
விஷாலுடன் பிரசன்னா, கவுதமி, ரகுமான், அஷ்யா ஆகியோரின் நடிப்பில் 40 நாட்கள் முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்தது.. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு வந்த நிலையில், நாயகன் விஷால் – இயக்குனர் மிஷ்கின் இருவருக்கும் மோதல் வெடித்தது.
படத்தின் பட்ஜெட்டை பாதி படம் முடிந்த நிலையில் செலவினை அதிகப்படுத்தியதாக மிஸ்கின் மீது நடிகர் விஷால் புகார் கூறினார். மேலும் மிஷ்கினுக்கு பதில் தானே அப்படத்தை இயக்கப்போவதாகவும் விஷால் அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில் பட விழா ஒன்றில் பேசிய இயக்குனர் மிஸ்கின் விஷால் மீது அடுக்கடுக்கான குற்ற சாட்டுகளைக்கூறி, கடுமையாகச் சாடினார். இந்நிலையில் அவர் இயக்கிய சைக்கோ திரைப்படம் வெளியானது. தொடர்ந்து அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை மிஸ்கின் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மிஸ்கின், நடிகர் விஷால் இருவருக்கும் இடையே தற்போது சமாதான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், இதைத் தொடர்ந்தே இயக்குனர் மிஸ்கின் விஷால் மீது திடீர் பாசமழை பொழியத்தொடங்கியுள்ளதாகவும்,
லாக்டவுன் முடிவுக்கு பின்பே துப்பறிவாளன் 2 பட த்தை தொடர்ந்து யார் இயக்குவது என்பது தெரிய வரும்.












