நடிகர் நடிகைகள் சிலர் இந்த லாக்டவுன் நேரத்தில் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷ், தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இந்த லாக்-அவுட் நாட்களில், அவர் தொடர்ச்சியாக செய்து வரும் யோகா குறித்த புகைப்படங்களை பதிவு செய்து இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷ், தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இந்த லாக்-அவுட் நாட்களில், அவர் தொடர்ச்சியாக செய்து வரும் யோகா குறித்த புகைப்படங்களை பதிவு செய்து இருக்கிறார்.
இதுகுறித்து ஐஸ்வர்யா தனுஷ் கூறியதாவது:
“இந்த லாக்-அவுட் நேரத்தில் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கடந்த சில மாதங்களாக லாக்-அவுட் ஏற்பட்டுள்ளதால் அனைவருக்கும் ஒருவிதமான மன அழுத்தம் மற்றும் உடல் அளவில் சோர்வு ஏற்பட்டிருக்கும். இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டியது மிகவும் முக்கியம்.எனவே தான் ஒவ்வொரு புதன்கிழமையும் ஒர்க்அ வுட் குறித்த சில டிப்ஸ்களை தெரிவித்து வருகிறேன். யோகா செய்வது, மனதை புத்துணர்ச்சியாக வைத்து கொள்வதற்கு தேவையான பயிற்சி மற்றும் சத்தான உணவு ஆகியவை இந்த நேரத்தில் மிகவும் முக்கியம். இவை மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும்” என்று கூறியுள்ளார்