
பிக்பாஸில் சில்லுண்டித்தனம் செய்து பேமஸ் ஆனவர் மீரா மிதுன் .எதை மறைக்க வேண்டுமோ அதை கவர்ச்சியாகக் காட்டி காலத்தைக் கடத்திக்கொண்டிருப்பவர். எழவு வீட்டுக்கு வந்து வம்படியாக மாரடிக்கும் சில வம்பிகள் போல இந்த மீரா மிதுனும் வெட்டியாக கம்பு சுத்துவார்.
எப்படியாவது அன்றைய செய்தியில் இடம் பெற வேண்டும் என்கிற ஆசை உள்ளவர்.
தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ,தளபதி விஜய் இருவரையும் வம்புக்கு இழுத்து செமத்தியாக ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
“தமிழ்நாடு செத்துக்கொண்டிருக்கிறது.! ஆனால் நான் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறேன்.ரஜினிகாந்த் கன்னடர் ,நடிகர் விஜய் கிறிஸ்தவர் ..இவர்கள் என்னுடைய பெயரைக் கெடுக்கப்பார்க்கிறார்கள். இணையதளத்தின் வழியாக இழிவுபடுத்துகிற இவர்களை பெண்கள் துன்புறுத்தல் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு தயங்கமாட்டேன் .
தமிழ்நாடு தமிழர்கள்,இந்துக்களுக்கானது.இங்கே மலையாளிகளும் கிறிஸ்தவர்களும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.தமிழ்ப்பெண்களுக்கு அநீதி விளைவிக்கிறார்கள். எனக்கு கோபம் வந்தால் கண்ணகி மதுரையை எரித்ததுபோல தமிழ் நாட்டை செய்து விடுவேன்.
இவ்விதமாக டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
நெட்டிசன்கள் நார் நாராக கிழித்து தொங்கப்போட்டிருக்கிறார்கள் மீரா மிதுனை.! எப்படி கழுவிக்கழுவி ஊற்றினாலும் கட்டை தாங்குகிறது.!












