பாலிவுட்டில் அமோகமான வரவேற்பினை பெற்ற படம் குயின்.
விகாஷ் பால் இயக்கத்தில்,கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான படம், இதில் ராஜ்குமார் ராவ், லிசா ஹைடன், உட்பட பலர் நடித்திருந்தனர்.இப்படத்தில் கங்கனா ரனாவத்தின் நடிப்பு பரபரப்பாகப் பேசப்பட்டு, தேசிய விருதும் கிடைத்தது.
இதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் ரீமேக் ஆனது.
தமிழில் பாரிஸ் பாரிஸ் என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் கங்கனாவின் கேரக்டரில், காஜல் அகர்வால் நடித்திருந்தார் .இவருடன் எல்லி அவ்ரம், வினய பிரசாத், பார்கவி நாராயண், டி.பி.கஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
கன்னடத்தில் இந்தப் படம், பாருல் யாதவ் நடிப்பில் பட்டர்ஃபிளை என்ற பெயரிலும் தெலுங்கில் தமன்னா நடிப்பில் தட் இஸ் மகாலட்சுமி என்ற பெயரிலும், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிப்பில் ஸாம் ஸாம் என்ற பெயரிலும் படமாக்கப்பட்டது .
தமிழ் மற்றும் , கன்னடத்தில் நடிகர் ரமேஷ் அரவிந்தும், தெலுங்கில் பிரஷாந்த் வர்மாவும், மலையாளத்தில் நீலகண்டாவும் படத்தை இயக்கிஇருந்தனர் . படம் முடிவடைந்து பல மாதங்களாகி விட்ட நிலையில்,இதன் டீசர் சமீபத்தில் வெளியானது
இந்த டீசரில் காஜலின் சர்ச்சைக்குரிய காட்சி பெரிதும் விமர்சனத்திற்குள்ளானது, ஒரு பெண் காஜலின் நெஞ்சை தொடுவது போல ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது .
இந்தியில் வெளியான குயின் படத்திற்கு கிடைத்த வரவேற்பு இதற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர் . சில வருடங்களாகியும் ரிலீஸ் ஆகவில்லை
இந்த லாக்டவுன் நேரத்தில் பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ஓடிடி பிளாட்பார்மில் வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து காஜல்,தமன்னா,மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.