வனிதாவிஜய்குமார் மூன்றாவதாக பீட்டர்பால் என்கிறவரை கல்யாணம் செய்து கொண்ட பிறகு யூ டியூப் தளங்களில் வாதப்பிரதிவாதங்கள் அலையடித்து வருகிறது
வனிதாவும் சரி லட்சுமி ராமகிருஷ்ணனும் சரி ஒருவர்க்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதைப்போல வார்த்தைகளை வாரி வீசினார்கள்.
தயாரிப்பாளர் ரவீந்திரன் .கஸ்தூரி ஆகியோர் லட்சுமி ராமகிருஷ்ணன் ,பீட்டர்பாலின் அதிகாரபூர்வமனைவி எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக இருந்து வாதாடினார்கள் .இதில் யூ டியூப் பிரபலமான சூரியாதேவி என்பவரும் கலந்து கொண்டு கலகலப்பு ஏற்படுத்தினார். ஒரே ரகளையாக இருந்தது.
வனிதா விஜய்குமார் தன்னுடைய செல்வாக்கினை பயன்படுத்தி நால்வர் மீதும் போலீசில் புகார் செய்தார்.நேற்று நள்ளிரவில் சூரியாதேவியை போலீஸ் குண்டாஸ் சட்டத்தில் தூக்கிச்சென்று இருக்கிறது.