
ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு -ஆட்சிக்கு எதிராக இருந்து போராடியவர் தீரன் திப்பு சுல்தான். மைசூரை ஆண்ட மன்னன். மைசூர் புலி என்கிற சிறப்பு உண்டு.
இவரைப் பற்றிய பாடங்களைத்தான் ஏழாம் வகுப்புப் புத்தகங்களில் இருந்து நீக்கும்படி பாஜக அரசு உத்திரவிட்டிருக்கிறது. 
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ராஜ்கிரணும் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,“திப்பு சுல்தானை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கிவிடலாம்… இந்திய சரித்திரத்திலிருந்து நீக்கிவிட முடியுமா…? அவ்வளவு ஏன், உங்கள் மூளைக்குள் இருந்தாவது அவரை நீக்கிவிட முடியுமா…? எதை மறக்கடிக்க வேண்டுமென்று நினைக்கிறோமோ, அதை நம்மாலேயே, மறக்கவே முடியாது என்பது தான் மனோதத்துவம்…” என்று தெரிவித்துள்ளார்.












