“சுஷாந்த் சிங்கின் மானேஜர் திஸான் சாலியான் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. அவள் தற்கொலை செய்யக்கூடியவள் இல்லை” என்று இப்போது சாலியானின் பெற்றோர் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார்கள் .
திஸான் சாலியான் பாலிவுட்டில் பிரபலமான பெண். விரைவில் கல்யாணம் நடக்க இருந்த நிலையில் திடீரென ஒரு நாள் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் பிரச்னையை முடித்து வைத்தனர் .
ஆனால் இந்த பெண் தற்கொலை செய்து கொண்ட அடுத்த வாரமே சுஷாந்த் சிங் தூக்கில் தொங்கினார்.மானேஜரை தொடர்ந்து நடிகரும் தற்கொலை செய்து கொண்டதாக வந்த செய்தியின் அடிப்படையில் இரு மரணங்களுக்கும் தொடர்பு இருக்கலாமா என விசாரித்த போலீசார் “இல்லை. சுஷாந்த் மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக “பிரச்னையை முடித்தனர்.
ஆனால் சுஷாந்தின் காதலி ரியா சக்ரவர்த்தி ,நடிகை கங்கனா ரனாவத் ,மற்றும் சுஷாந்தின் நண்பர்கள் “பாலிவுட்டில் இருக்கிற மாபியா கும்பலினால்தான் சுஷாந்த் மரணம் நிகழ்ந்திருக்கிறது.நெபோட்டிசம்தான் காரணம் ” என்று சொல்லி சி பி.ஐ விசாரணை கேட்டார்கள்.பாஜக சுப்பிரமணியன் சுவாமியும் சிபிஐ விசாரணை கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
சுஷாந்தின் அப்பா பாட்னா போலீசில் புகார் செய்ய மும்பை ,பாட்னா போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.பாட்னா போலீசுக்கு மும்பை போலீஸ் ஒத்துழைக்கவில்லை.
இந்த நிலையில்தான் மகாராஷ்டிரா முதல்மந்திரி உத்தவ் தாக்கரே ,மகன் ஆதித்ய தாக்கரே இருவருக்கும் சம்பந்தம் இருப்பதாக கங்கனா குண்டை தூக்கி போட்டார். இப்படி மர்ம முடிச்சுகள் மேலும் மேலும் இறுகிக்கொண்டே போகிற நிலையில்தான் திஸான் சாலியான் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் வந்திருப்பதாக சாலியானின் பெற்றோர் “அவள் தற்கொலை செய்திருக்க மாட்டாள். விபத்தாகக்கூட இருக்கலாம்”என சந்தேகத்தை கிளப்பியிருக்கிறார்கள் .
விசாரணை சிபிஐயின் கைக்கு போன பிறகு அவர்கள் இப்படி கூறியதற்கு காரணம் இல்லாமல் இருக்காது என்கிற சந்தேகம் புதிதாக வந்திருக்கிறது.போகப்போக இன்னும் என்னென்ன கிளம்புமோ தெரியலீங்க.!!