

இந்தி ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதுதான் தமிழரின் நிலைமை.நாட்டின் நிலையும் அதுதான்.!
ஆனால் மத்திய அரசு இந்தி ஒன்றுதான் அரசு மொழி .அதன் வழியாகத்தான் செயல்படுவோம் என்கிற மனநிலையுடன் இருப்பதாகத் தெரிகிறது. ஆணவத்துடன் அதிகாரிகள் நடந்து கொள்வதை மக்கள் நீதி மையத்தலைவர் கமல்ஹாசன் ,கவிஞர் வைரமுத்து ஆகியோர் கடுமையாக கண்டித்திருக்கிறார்.
கமல்ஹாசன் கூறி இருப்பதாவது :
“ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை.இது இந்தி அரசல்ல.இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம்.வாழிய பாரதமணித்திருநாடு”
கவிஞர் வைரமுத்துவின் கண்டனப்பதிவு.
“இந்தி அறியாதார் யோகா பயிற்சியிலிருந்து வெளியேறலாம் என்று இந்திய அமைச்சகச் செயலாளர் அவமதித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா அல்லது இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா என்ற கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள். “












