
டிஸ்கவரி சேனலின் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்நிகழ்ச்சியின் இயக்குநரான பியர் கிரில்ஸ்தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். பாலிவுட் நடிகர் அக்சய்குமாரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.தற்போது வெளியாகியுள்ள டீஸரை நடிகர் அக்சய்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில்புகைப்படங்களுடன் பகிந்துள்ளார்.
அதில், பியர் கிரில்ஸ் உடன் ” தி வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பு அதில் அதிக சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும் என நினைத்த எனக்கு, யானை சாணத்தில்’ டீ’ போட்டு கொடுத்து சர்ப்ரைஸ் ஆக்கிவிட்டார் பியர் கிரில்ஸ் “என்று அக்சய்குமார் பதிவிட்டுள்ளார்.












