
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து கங்கனா ரனாவத்துக்கும் மகாராஷ்டிரா அரசுக்கும் தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.
சுஷாந்தின் மரணத்தில் சிவசேனா தலைவரின் மகனுக்கு தொடர்பு இருக்கிறது .அதனால் போலீசார் நியாயமாக நடக்கவில்லை என்பது கங்கனாவின் குற்றச்சாட்டு. ஆனால் சிவசேனா கட்சியினர் மறுத்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது சிபிஐ வசம் வழக்கு போய் விட்டது. மகாராஷ்டிரா போலீசார் ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.
சிவசேனையின் ராஜ்ய சபை உறுப்பினரும் முக்கிய புள்ளியுமான சஞ்சய் ரவுத் மீது கங்கனா தற்போது கடுமையான குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார்.
“மும்பைக்கு திரும்பி வராதே என்று பகிரங்கமாக என்னை மிரட்டியிருக்கிறார். மும்பை தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கிற காஷ்மீர் மாதிரி ஆகிவிட்டதோ என்கிற உணர்வு ஏற்பட்டிருக்கிறது” என்கிறார் கங்கனா .












