மண் புழுவுக்கு அஞ்சு இதயம் .மனுஷனுக்கு ஒரு இதயம் .இந்த காதலுக்கு எத்தனை இதயம்? லவ்வுக்கு இதயம் இருக்கா? அல்லது இதயத்துக்குள் காதல் இருக்கா?ஒரே குழப்பம்ஸ் !
எதுக்காக இந்த பினாத்தல் ?
ஒன்றாகவே ஊர் ஊராக சுற்றுகிறார்கள். லிவ் இன் ரிலேஷனில் இருப்பதாக சொல்லப்படுகிறது. சந்தோஷமுடன் வாழ்கிறார்கள்.
இப்படி உல்லாசப் பறவைகளாக வலம் வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் ஜோடிக்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் கேட்கிறார்கள்
” தனக்கும் நயன்தாராவுக்கும் இடையே எப்போது காதல் திகட்டிப் போகிறதோ அப்போது திருமணம் செய்துகொள்வோம். அதுவரை காதலித்துக்கொண்டிருப்போம்” என்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
அதே போல ரசிகர்களும் சமூக ஊடகங்களில் நயன்தாராவிடம் எப்போது திருமணம் என்று கேட்டு வருகின்றனர்.
” சினிமாவில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற பிறகுதான் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக “கூறிஇருக்கிறாராம் நயன்தாரா!
அப்ப அம்மாவாகும் திட்டமே இல்லையா? அப்பாவாகிற எண்ணம் இயக்குநருக்கும் இல்லியா?
அல்லது தேசிய விருது வாங்குவதற்கு குறுக்கு வழி ஏதாவது இருக்கிறதா?மத்திய அரசு மனசு வச்சா கல்யாணம்! சூப்பர்!
சொல்லுங்க சாமி .எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்!